Freelancer / 2023 ஜூன் 13 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எச்.எம்.எம்.பர்ஸான்)
மாற்றுத்திறனாளி நபரொருவர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு - கொழும்பு, வாகனேரி பிரதான வீதியில் திங்கட்கிழமை(12) இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர் ஓட்டமாவடி - காவத்தமுனை ஹிஸ்புல்லாஹ் வீதியைச் சேர்ந்த ஏ.நஸீர் எனும் மாற்றுத்திறனாளி நபர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.
படுகாயங்களுக்குள்ளான நபர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
மர்மமாமன முறையில் படுகாயமடைந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026
26 Apr 2026