2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மாற்றுத்திறனாளிகளுக்கு விதை பொதிகள் வழங்கப்பட்டன

Editorial   / 2020 ஏப்ரல் 17 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்

வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கையில் ஆர்வமுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு விதை பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தால் விதை பொதிகள் வழங்கும் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், குறித்த பிரதேச செயலகப் பிரிவின் கீழ் இயங்கி வரும் சிகரம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, விதை பொதிகள் நேற்று முன்தினம் (15) வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த விதை பொதிகளை, பிரதேச செயலக விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எம்.அஸ்பர், மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் எஸ். ஐ. தெளபீக் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று, பயிரிடப்படும் இடங்களைப் பார்வையிட்டு, வழங்கி வைத்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X