Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை
எம்.எம்.அஹமட் அனாம் / 2017 ஜூலை 04 , மு.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தைத் துப்புரவு செய்யும் பணிகள், நேற்று (03) இடம்பெற்றன.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஞா.கிருஸ்ணப்பிள்ளை தலைமையில் நடைபெற்ற சிரமதானப் பணியில், நாடாளுமன்ற உறுப்பினர்களான சா.வியாழேந்திரன், சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் மா.நடராசா, பிரதேச இளைஞர்கள், மாவீரர்களின் உறவினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
கடந்த காலத்தில் இடம்பெற்ற தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் போது உயிர் நீர்த்த மாவீர்களின் துயிலும் இல்லமானது யுத்தம் நிறைவுற்றதும் படை வீரர்களினால் தகர்க்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாவீரர் துயிலும் இல்லம், தற்போது துப்புரவு செய்யப்பட்டு, மாவீரர்களை நினைவு கூருவதற்கு ஏற்றதாக அமைந்திருந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
மாவீரர்களை அடக்கம் செய்யப்படும் போது அவர்களின் நினைவாக அமைக்கப்பட்டிருந்த நினைவுக் கற்கள், படை வீரர்களால் கடந்த காலங்களில் புதைக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்றைய சிரமதானத்தின் போது, அக்கற்கள் தோண்டியெடுக்கப்பட்டு, குத்துமதிப்பான இடத்தில் மீண்டும் நாட்டப்பட்டது.
வாகரைப் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட அரசியல்வாதிகளிடம் மக்கள் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் துப்புரவுப் பணி இடம்பெற்றதாக பொதுமக்கள் மேலும் தெரிவித்தனர்.
மாவீரர்கள் துயிலும் இல்லத்தைத் துப்புரவு செய்யும் பணியுடன் நின்று விடாது, இதனைப் பராமரிக்கும் முகமாக புலம்பெயர் உறவுகள் மற்றும் அரசியல்வாதிகள், தனவந்தர்கள் முன்வந்து உதவிகளை வழங்கி மாவீரர்களை நினைவு கூருமாறு கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
24 May 2025
24 May 2025