2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

மின்சார வேலியில் சிக்கி முதியவர் பலி

Princiya Dixci   / 2022 ஜூலை 25 , மு.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எஸ்.சதீஸ்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருநூறுவில், பாவக்கொடிசேனை பிரதேசத்தில் மிசாரம் தாக்கி முதியவர் ஒருவர், நேற்று (24) அதிகாலை உயிரிழந்துள்ளார் என வவுணதீவு பொவிஸார் தெரிவித்தனர்.

முதலைக்குடா கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 71 வயதுடைய கணபதிப்பிள்ளை சின்னத்தம்பி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பிரதேசத்தில் நபரொருவரின் தோட்ட வளாகம், மாடு, ஆடுகளை பராமரித்து வந்ததாகவும் தோட்டத்தைப் பாதுகாக்கும் பொருட்டு யானைகளுக்கு வைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி முதியவர் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற  நீதிவான பீற்றர் போலின் உத்தரவுக்கமைவாக சம்ப இடத்துக்குச் சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தைப் பார்வையிட்டார்.

பிரேத பிரிசோதனையின் பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைககும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் வவுணதீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X