2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழப்பு

Freelancer   / 2021 ஜூன் 15 , பி.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு கிரான்குளம் பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (15) மாலை இடம் பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

கிரான்குளம் வடக்கு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளையின் தாயான 52 வயதுடைய ந.பிரமராணி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

குறித்த பெண் சம்பவதினமான இன்று மாலை வழமைபோல தனது வெள்ளரி தோட்டத்துக்கு நீர் பாய்ச்சுவதற்கு நீர் பம்பில் மின்சார கையாண்ட போது மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர். 

M

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X