Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஜூன் 02 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, ஏ.எச்.ஏ. ஹுஸைன், க-சரவணன், எஸ்.சபேசன்
யானையின் அச்சுறுத்தலில் இருந்து தமது வயலை பாதுகாப்பதற்கு வைக்கப்பட்டிருந்த மின்சார இணைப்பால் அதே வயலின் விவசாயி உயிரிழந்த சம்பவமொன்று, மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 39ஆம் கொலணி பகுதியிலுள்ள வயல்வெளியில், இன்று (02) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
39 கொலணி, ஈயாக்காளி பகுதியில் விவசாய செய்கையில் ஈடுபட்டு வந்த தும்பங்கேனி கிராமத்தை சேர்ந்த 58 வயதுடைய சீனித்தம்பி சந்திரசேகரம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஈயாக்காளி குளத்தை அண்டிய பகுதியில் விவசாயிகள் பெருமளவில் நெற்செய்கையில் ஈடுபட்டுவருகின்றனர். எனினும், அப்பகுதியில் தொடர்ச்சியாக யானைகளின் அச்சுறுத்தல் காரணமாக விவசாயிகள் பெரும் இழப்புகளை எதிர்கொண்டுவந்துள்ளனர். எனவே, விவசாயத்தின் பாதிப்பைக் கருத்தில்கொண்டு, தமது வயல் நிலங்களை சூழ மின்சார இணைப்பை விவசாயிகள் வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை குறித்த வயல் பகுதிக்கு வந்த யானையை, அங்கு காவலில் இருந்து விவசாயி விரட்டியடித்துவிட்டு, தமது காணிக்குள் செல்ல முற்பட்டபோது, வயல் வேலியிலுள்ள கம்பியில் இருந்த மின்சாரம் தாக்கி, விவசாயி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அங்குவந்த யானை, வேலியை உடைத்துள்ள நிலையில், அந்த வேலியில் இருந்த மின்சார இணைப்பு, ஏனைய வேலிக் கம்பியிலும் இணைந்திருந்தமையால் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
சம்வம் தொடர்பான விசாரணைகளை, வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
01 May 2025