2025 மே 07, புதன்கிழமை

மின்னல் தாக்கி மீனவர் பலி

Editorial   / 2022 ஒக்டோபர் 26 , பி.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-- .எச்.ஹுஸைன் 

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் பகுதியில் நேற்றைக்கு முன்தினம் (24) மாலை மின்னல் தாக்கி சில மீனவர்கள் காயமடைந்த அதேநேரம் ஓரு மீனவர் காணாமல்போயுள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை  (25.10.2022 ) திகதி மாலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
 

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடியுடன் கூடிய கடும் மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் நேற்றைக்கு முன்தினம் மாலை வேளையில் முகத்துவாரம் ஆற்றுவாய் பகுதியில் கரையோரமாக மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களை மின்னல் தாக்கியுள்ளது.

இதன்போது சில மீனவர்கள் காயமடைந்த அதேநேரம் ஒரு மீனவர் காணாமல் போயுள்ளார்.
காணாமல் போன மீனவர் திராய்மடு பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 54 வயதுடைய மீனவர் என்பதுடன், காணாமல் போயிருந்த குறித்த மீனவரை தேடும் பணிகள் அப்பகுதி மீனவர்களினால் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில்  செவ்வாய்க்கிழமை மாலை அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X