2025 மே 23, வெள்ளிக்கிழமை

மியர்ன்மாரைக் கண்டித்து காத்தான்குடியில் பெண்கள்இன்று ஆர்ப்பாட்டம்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 செப்டெம்பர் 04 , மு.ப. 06:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மியான்மார் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து காத்தான்குடியில் இன்று (04) பெண்கள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடவுள்ளதாக பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினருமான திருமதி சல்மா ஹம்சா தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தை பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு ஏற்பாடு செய்துள்ளதாகவும் இதில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் பெண்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன், இந்த ஆர்ப்பாட்டத்தில் காத்தான்குடி, மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பெண்களைக் கலந்துகொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் இலங்கை அரசாங்கத்துக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்குமான மகஜர்கள் கையளிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X