2025 ஜூலை 16, புதன்கிழமை

மியான்மாருக்கு எதிராக கிழக்கு ஊடகவியலாளர்கள் கையொப்பம் இட்டனர்

எம்.எஸ்.எம்.நூர்தீன்   / 2017 செப்டெம்பர் 06 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

மியான்மார் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்பில் மனிதாபத்துக்கெதிரான குற்றங்கள் மற்றும் படுகொலைகளுக்காக, மியான்மாரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துமாறு, ஐக்கிய நாடுகள் சபையைக் கோரி, கிழக்கு மாகாண ஊடகவியலாளர்கள், திங்கட்கிழமை இரவு கையொப்பமிட்டனர்.

காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடியில் நடைபெற்ற கிழக்கு மாகாண ஊடகவியலாளர்களின் ஹஜுப் பெருநாள் ஒன்றுகூடலின் போது, இந்தக் கையொப்பங்கள் இடப்பட்டன.

இந்த கையொப்பங்கள் அடங்கிய பதாதையை, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பிரதிநிதிகளிடம் காத்தான்குடி மீடியா போரம், ஓரிரு தினங்களில் கையளிக்கவுள்ளதாக, காத்தான்குடி மீடியா போரத்தின் செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .