2025 செப்டெம்பர் 07, ஞாயிற்றுக்கிழமை

மியான்மார் அகதிகளுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம்

Freelancer   / 2025 ஜனவரி 17 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

மியான்மார் ரோஹிங்கிய அகதிகளை நாடுகடத்தும் தீர்மானத்தை அரசு மீள்பரீசீலனை செய்யக்கோரி, மட்டக்களப்பு நகர் ஜாமிஉஸ் ஸ்லாம் ஜூம்ஆ மஸ்ஜித் பள்ளிவாசல் முன்பாக, வெள்ளிக்கிழமை (7), பொது மக்கள், கவனயீர்ப்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

மட்டக்களப்பு விவசாய சம்மேளனம்,ரோஹிங்கிய அகதிகளை நாடுகடத்தும் இந்த அரசின் தீர்மானத்தை எதிர்த்து பள்ளிவாசலுக்கு முன்னாள் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுத்ததையடுத்து, வெள்ளிக்கிழமை பகல் 1 மணிக்கு தொழுகையின் பின்னர், அங்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். நழீம், விவசாய சம்மேளன தலைவர் சுந்தரேசன் உட்பட பொதுமக்கள் ஒன்று திரண்டனர்.

 

இதனை தொடர்ந்து, ரோஹிங்கிய அகதிகளை துன்புறுத்தும் மியான்மாருக்கு திருப்பி அனுப்பாதே, இலங்கை அரசே சர்வதேச சட்டங்களை அமுல்படுத்து, யு.என்.எச்.சி.ஆர். அப்பாவி மியான்மார் அகதிகளை பொறுப்பெடுத்து புகலிடம் கொடுக்கும் நாடுகளுக்கு பராப்படுத்து, மியான்மாரில் மேலும் ஒரு இலட்சம் அகதிகள் படையெடுப்பார்கள் என்ற பீதியை கிளப்பாதே போன்ற பல வாசகங்கள் ஏந்தியவாறு, சுமார் ஒரு மணித்தியாலம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துவிட்டு, ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.AN

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X