வா.கிருஸ்ணா / 2018 மே 09 , பி.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு மாவட்டத்தில் மிளகாயின் விலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்துவருவதன் காரணமாக, மிளகாய்ச் செய்கையாளர்கள் பெரும் பாதிப்பை எதிர்கொள்வதாகத் தெரிவிக்கின்றனர்.
மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட களுதாவளை உட்பட பல்வேறு பகுதிகளில், பல காலமாக மிளகாய்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. இப்பகுதிகளில், சுமார் 2,000 ஏக்கர் காணிகளில் 1,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள், இந்த மிளகாய்ச் செய்கையை மேற்கொண்டுவருகின்றன.
களுதாவளை, களுவாஞ்சிகுடி, தேற்றாத்தீவு, மாங்காடு, செட்டிபாளையம், குருக்கள்மடம், கிராங்குளம் போன்ற பகுதிகளில் கடற்கரையை அண்டிய பகுதிகளில் மிளகாய்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.
ஒரு கிலோவை உற்பத்தி செய்வதற்கு, தாம் 20 ரூபாய் வரையில் செலவிட வேண்டிய நிலையில், தற்போது மிளகாயை வியாபாரிகள், தங்களிடம் 20 ரூபாய் தொடக்கம் 25 ரூபாய் வரையிலேயே கொள்வனவு செய்வதாகவும், விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலத்தில் ஒரு கிலோகிராம் மிளகாய் 1,000 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்நிலை ஏற்பட்டுள்ளதென, பிரதேச விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
தமது மிளகாயை, ஒரு குறிப்பிட்ட பகுதியினரே கொள்வனவுசெய்துவருகின்றனர் எனவும், மிளகாயை கூடிய விலைக்கு சந்தைப்படுத்துவதற்கான வசதிகளை உரிய தரப்பினர் ஏற்படுத்தி தரவேண்டும் எனவும், விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும், தொடர் இழப்பை எதிர்கொண்டுவரும் தமக்கான நட்டஈட்டை வழங்குவதற்கான நடவடிக்கையை, அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும் எனவும் மிளகாய்ச் செய்கையாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
1 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
8 hours ago