2025 மே 02, வெள்ளிக்கிழமை

முகக் கவசம் அணியாமல் வருவோருக்கு எச்சரிக்கை

Editorial   / 2020 ஜூன் 03 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முகக் கவசம் அணியாமல் வருகை தருபவர்களை, பொலிஸார் திருப்பி அனுப்பி வைக்கும் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடுகள், சான்றிதழ்கள், பதிவுகள் செய்வதற்கு வரும் பொதுமக்கள், முகக் கசவம் அணிந்து, கைகளை கழுவி, பொலிஸ் நிலையத்துக்குள் வருமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், பொலிஸ் நிலையத்திற்கு வரும் அனைவரும் முகக் கவசங்களை கட்டாயம் அணிந்து வர வேண்டும். ஆனால், முகக் கவசம் அணியாமல் வருகை தந்த பொதுமக்கள், பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அறிவுரைகளும் வழங்கப்பட்டது.

அத்தோடு, முகக் கவசங்களை அணியாமல் வருகை தந்தால் கைது செய்யப்படுவீர்கள் என்றும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் எச்சரிக்கை வழங்கப்பட்டு வருகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .