2025 ஓகஸ்ட் 07, வியாழக்கிழமை

முச்சக்கரவண்டி விபத்தில் ஒருவர் பலி: மூவர் காயம்

Mayu   / 2024 ஜனவரி 16 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி        

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் குருக்கள்மடம் பகுதியில் செவ்வாய்கிழமை(16) மாலை இடம்பெற்ற  விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளதாக களுவாஞ்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்த லொறி ஒன்றும், களுவாஞ்சிகுடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணத்தை மேற்கொண்ட  முச்சக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த, விபத்துச் சம்பவத்தில் முச்சக்கர வண்டியில் பணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் மூவர் பலத்த காயங்களுக்குள்ளாகி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தயிசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர் மண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், காயமடைந்த ஏனையோரும் மண்டூர் மற்றும்இ எருவில் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .