Princiya Dixci / 2021 மே 30 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எம்.அஹமட் அனாம்
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முடக்கப்பட்ட மருதநகர் கிராமத்தில் 43 பேருக்கு நேற்று (29) மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்தார்.
மருதநகர் கிராமத்தில் தனிப்படுத்தலில் இருந்தவர்கள் உட்பட மேலேழுவாரியாக 43 பேருக்கு அன்டிஜன் பரிசோதனையும், 20 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளும் நேற்று முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தப் பரிசோதனைகளில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ், சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் ஈடுபட்டனர்.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படும் நிலையில், மக்களின் பாதுகாப்புக் கருதி தொடர்ச்சியாக பி.சி.ஆர். பரிசோதனை மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
21 minute ago
36 minute ago
39 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
36 minute ago
39 minute ago
54 minute ago