2025 மே 23, வெள்ளிக்கிழமை

முடிவுத் திகதி நீடிப்பு

வடிவேல் சக்திவேல்   / 2017 ஓகஸ்ட் 09 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தின் 2017ஆம் ஆண்டுக்கான 9ஆவது தமிழியல் விருதுக்குரிய நூலின் தேர்வுக்காக நூல்களை ஏற்றுக்கொள்ளும் விண்ணப்ப முடிவுத் திகதி, எதிர்வரும் 15ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக, அம்மையத்தின் மேலாளர் ஓ.கே.குணநாதன் தெரிவித்தார்.

இதுவரை தேர்வுக்காக நூல்களை அனுப்பி வைக்காத, உலகின் எப்பக்கத்திலும் வாழும் இலங்கைப் படைப்பாளர்கள், 2015 - 2016 ஆகிய ஆண்டுகளில் முதற்பதிவாக வெளிவந்த சகல துறை சார்ந்த தமது நூல்களின் 3 பிரதிகளை, டொக்டர் ஓ.கே.குணநாதன், மேலாளர், எழுத்தாளர் ஊக்கவிப்பு மையம், இல:1ஏ, பயனியர் வீதி, மட்டக்களப்பு எனும் விலாசத்துக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X