2025 மே 21, புதன்கிழமை

‘முட்டாள்களுக்கு சரித்திரம் இல்லை’

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஒக்டோபர் 29 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

“ஜனநாயகத்தின் வெற்றிக்கான ஒரு விடயமாக 20ஆவது அரசியல் திருத்தத்தை நாங்கள் பார்க்கின்றோம். அதனை ஆதரிக்காத அரசியல் முட்டாள்களாக நாம் சரித்திரத்தில் இடம்பிடிக்க விரும்பவில்லை” என, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

கலப்புத் தேர்தல் முறை சட்ட ஏற்பாடுகள் பற்றி அறிவூட்டும் நிகழ்வு, ஏறாவூர் அல்முனீறா மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (28) நடைபெற்ற போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் தொடர்ந்து பேசிய முன்னாள் முதலமைச்சர்,

“சமகாலத்தில் சிலாகித்துப் பேசப்படுகின்ற பல விடயங்கள் பற்றித் தெளிவில்லாத் தன்மை இருப்பதால் அவற்றைத் தெளிவுபெற்றுக் கொள்ள வேண்டிய கடமை பொதுவாக ஒவ்வொரு பிரஜைக்கும் உண்டு. குறிப்பாக  அரசியல் ஆர்வலர்கள் இந்த விடயங்களைப் புரிந்து கொண்டால் தேவையற்ற குழப்பங்களைத் தவிர்த்துக் கொள்ள வழியேற்படும்.

20ஆவது அரசியல் திருத்தம், மாகாண சபை தேர்தல் திருத்த சட்டத்திலே பெண்கள் உள்வாங்கப்படுகின்ற விடயம்,  50 இற்கு 50 என்கின்ற கலப்பு முறைத் தேர்தல் விடயம், மாகாண சபைகள் எல்லை மீள் நிர்ணய விடயம் என்பன இவற்றில் பிரதானமானவை.

20ஆவது அரசியல் திருத்தத்தை கிழக்கு மாகாண சபை ஏன் எதிர்த்தது அதன் பின்பு ஏன் ஆதரவு வழங்கியது என்கின்ற விடயமும் சிலாகித்துப் பேசப்பட்டு வருகின்றது. 20ஆவது அரசியல் திருத்தத்திலே ஒரேயொரு விடயம் மாத்திரம்தான் நாங்கள் எதிர்த்த விடயம்.

அதாவது, மாகாண சபைகள் கலைக்கப்பட்டு திகதி அறிவிக்கப்படுகின்ற விடயம் நாடாளுமன்றத்தால் தீர்மானிக்கப்படும் என்ற ஒன்றைத்தான் நாங்கள் கரிசனைக்கு எடுத்துக் கொண்டு அது பற்றி மிக உன்னிப்பாக பரிசீலித்தோம்.

ஜனநாயகத் தன்மை என்றால் எல்லா மாகாணங்களும் ஒரே தினத்தில் தேர்தல் நடத்தப்பட்டு, ஒரே தினத்தில் ஆட்சியேறி ஒரே தினத்தில் கலைக்கப்பட வேண்டும்.

மக்களால் தெரிவுசெய்யப்படாத ஒரு தனி அதிகார நபராக  இருக்கும் மாகாண ஆளுநருடைய கையிலே ஒட்டு மொத்த மாகாண மக்களின் ஆட்சி தலைவிதியாக  இப்பொழுது பாரப்படுத்தப்பட்டுள்ளது.

இதை சில அரசியல் குறையறிவு முட்டாள்கள் சரியெனக் கூறி குதூகலிக்கின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X