2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

முதலைகளின் நடமாட்டம் அதிகரிப்பு

Princiya Dixci   / 2021 மார்ச் 10 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வ.சக்தி

மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள சிறிய குளங்களில் தற்போது நீர் நிரம்பியுள்ள நிலையில், அக்குளங்களில் முதலைகளின் நடமாட்டம் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் நீருக்காக குளங்களை நாடிச் செல்லும் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை முதலைகளின் பிடிக்குட்பவடுதாகவும்  கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் அமைந்துள்ள வெல்லாவெளி, பெரியபோரதீவு, கோவில்போரதீவு, பொறுகாமம், பழுகாமம் உள்ளிட் பல இடங்களில் அமைந்துள்ள குளங்களில் இவ்வாறு முதலைகளின் நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும், இவற்றில் மீன்பிடிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .