2025 மே 06, செவ்வாய்க்கிழமை

முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு வீடாக சென்று நிதியுதவி

Editorial   / 2020 ஏப்ரல் 09 , மு.ப. 10:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சிந்தனையில், சமூக சேவை திணைக்களத்தின் கீழ், முதியோர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி வழங்கும் வேலைத்திட்டத்துக்கமைய வீடு வீடாகச் சென்று நிதி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. 

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவில், பிரதேச செயலாளர் எம்.எஸ்.எச்.முஸம்மிலின் வழிகாட்டலில், சமூக சேவை திணைக்களத்தால் நிதியுதவி வழங்கும் நிகழ்வு, சமூக சேவை திணைக்களத்தின் சமூகசேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம் தலைமையில், சமூகசேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள் சகிதம் வீடு வீடாகச் சென்று நிதிகளை வழங்கி வருகின்றனர்.

இதன்படி, கோறளைப்பற்று மத்தி சமூக சேவை திணைக்களத்தால் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவின் ஒன்பது கிராம சேவகர் பிரிவுவிலுள்ள முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், சிறுநீரகம் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு ஐயாயிரம் ரூபாய் நிதி வழங்கி வைக்கப்பட்டது. 

அந்தவகையில், மாற்றுத்திறனாளுக்கு உதவி பெறுவதற்கான காத்திருப்புப் பட்டியலில் உள்ள 252 மாற்றுத்திறனாளிகளுக்கு ஐயாயிரம் ரூபாய் வீதம் பன்னிரண்டு இலட்சம் அறுபதாயிரம் ரூபாயும், முதியோர்கள் 89 பேருக்கு ஐயாயிரம் ரூபாய் வீதம் நான்கு இலட்சத்தி நாற்பத்தையாயிரம் ரூபாயும், சிறுநீரக பாதிப்புக்குள்ளான 21 பேருக்கு ஐயாயிரம் ரூபாய் வீதம் ஒரு இலட்சத்து ஐயாயிரம் ரூபாய் நிதியும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு, வழமையாக சமூக சேவைத் திணைக்களத்தின் மூலம் உதவி பெற்றுவரும் முதியோர் 632 பேருக்கு ஐயாயிரம் ரூபாய் வீதம் முப்பத்திரொரு இலட்சத்தி அறுபதாயிரம் ரூபாயும், மாற்றுத்திறனாளி 157 பேருக்கு ஐயாயிரம் ரூபாய் வீதம் ஏழு இலட்சத்து எண்பத்தையாயிரம் ரூபாய் நிதி வழங்கி வைக்கப்பட்டதாக சமூகசேவை உத்தியோகத்தர் ஏ.நஜீம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X