2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

முதியோர்க்கு கொடுப்பனவு

Princiya Dixci   / 2021 மே 28 , பி.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி தபாலகத்தில் முதியோர் கொடுப்பனவு மற்றும் விவசாயிகளுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு, இன்று (28) வழங்கப்பட்டன.

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளமையால் இம்மாதத்துக்குரிய முதியோர் கொடுப்பனவு மற்றும் பொது சன மாதாந்தக் கொடுப்பனவு போன்றவற்றை பெற்றுக்கொள்ள முடியாது போனது.

எனவே, மேற்படி கொடுப்பனவுகளை மாத்திரம் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில், இன்றும் (28) நாளையும் (29) காலை 09.30 மணி தொடக்கம் பிற்பகல் 02 மணி வரை அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் உப அஞ்சல் அலுவலகங்களை திறக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனையடுத்து, காத்தான்குடி தபாலகமும் இன்று திறக்கப்பட்டு, இக்கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன.

சுகாதார நடைமுறைகளை பேணி இக்கொடுப்பனவுகளை உரியர்கள் பெற்றுச் சென்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X