2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு உதவி

Editorial   / 2020 மே 08 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சபேசன்

கொவிட் 19 வைரஸ் நிலைமை காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாழ்வாதாரம் இழந்த முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசனின் ஒழுங்குபடுத்தலில், கனடா வாழ் உறவுகளின் “கல்வி கனெக்ஸன்” எனும் அமைப்பின் நிதிப் பங்களிப்பில், உலர் உணவுப் பொருள்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டன.

ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உப தலைவர் என்.நகுலேஸின் ஏற்பாட்டில், மண்முனை தென்எருவில்பற்று, போரதீவுப்பற்று, மண்முனை மேற்கு, ஏறாவூர்ப்பற்று, கோரளைப்பற்று வடக்கு, மண்முனை மெற்கு போன்ற பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள சுமார் 200க்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் குடும்பங்களுக்கு, தலா 2,500 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருள்கள் அடங்கிய பொதிகள் இவ்வாறு வழங்கப்பட்டன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X