2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

முன்னாள் போராளிகள் குறித்து கரிசனை

Editorial   / 2019 ஏப்ரல் 17 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்புப் பிரதிநிதிகளுக்கிடையிலான சந்திப்பு, மேயரின் காரியாலத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது, மாநகரம் தழுவிய ரீதியில் காணப்படும் முன்னாள் போராளிகளின் வாழ்வாதாரம், அப்போராளிக் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்தல், முன்னாள் போராளிகளின் பிள்ளைகளின் கல்வி நிலையை மேம்படுத்தும் முகமான ஒத்துழைப்புகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

மேற்கூறப்பட்ட விடயங்கள் தொடர்பில் மாநகரசபையினூடாகவும், நலன்விரும்பிகளின் ஒத்துழைப்பினூடாகவும் பல்வேறு செயற்றிட்டம் தற்போதும் இடம்பெற்று வருவதாகவும், தொடர்ந்தும் அவற்றை மேற்கொள்வதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும், மாநகர மேயர் இதன்போது உறுதியளித்துள்ளார்.

இந்தச் சந்திப்பில், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட இணைப்பாளர் நகுலேஸ், கிழக்கு மாகாண ஊடகப் பேச்சாளர் சாந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .