Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
Princiya Dixci / 2021 பெப்ரவரி 09 , பி.ப. 03:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி, எம்.எஸ்.எம்.நூர்தீன்
சட்டவிரோதமான முறையற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்ப்பதற்கான விழிப்பூட்டல்களை பொதுமக்களுக்கு வழங்கும் வகையில், மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வொன்று, காணிப் பிரிவுக்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நவரூபரஞ்ஜினி முகுந்தன் தலைமையில், மாவட்டச் செயலகத்தில் இன்று (09) நடைபெற்றது.
மாவட்டச் செயலக விளையாட்டு அபிவிருத்திப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தச் செயலமர்வுக்கு, புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பு அனுசரணை வழங்கியிருந்தது.
விளையாட்டு உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் பயிற்றுவிப்பாளர்களுக்கான செயலமர்வினூடாக பிரதேசத்திலுள்ள புலம்பெயரும் இளைஞர், யுவதிகளுக்கு விழப்பூட்டலை வழங்க இதனூடாக எதிர்பார்க்கப்படுகின்றது.
“புலம்பெயர்தல் பாதுகாப்பாக இருப்பதற்கே” என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இச்செயலமர்வில், சட்டவிரோதமான மற்றும் முறையற்ற வெளிநாட்டுப் பயனத்தால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் விபரீதங்கள் தெழிவுபடுத்தப்பட்டு, முறையான வெளிநாட்டுப் பயணங்களுக்கான வழிமுறைகள் எடுத்துக்காட்டப்பட்டன.
இச்செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்ட விளையாட்டுப் உத்தியோகத்தர் வீ.ஈஸ்வரன், புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் இணைப்பாளர் திருமதி ஆர். மயூரன் மேரி, மட்டக்களப்பு பிரதேச பொதுச் சகாதார பரிசோதகர் ஏ.ராஜ்குமார், விளையாட்டு உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
37 minute ago
2 hours ago
3 hours ago