2025 மே 25, ஞாயிற்றுக்கிழமை

’முஸ்லிம் தனியார் சட்டத்தைத் திருத்தும் முன்மொழிவுகளில் பெண் காதி நீதிபதிகள் தேவையில்லையென முன்மொழி

Suganthini Ratnam   / 2017 ஜூலை 04 , பி.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

 

இலங்கையில் முஸ்லிம் விவாக - விவாகரத்துச் சட்டங்களை திருத்தும் முன்மொழிவுகளில், பெண் காதி நீதிபதிகள் தேவையில்லை என்று முன்மொழிவை வைத்துள்ளதாக, பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவி ஜனாபா சல்மா ஹம்ஸா தெரிவித்தார்.

காத்தான்குடியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறினார்.

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், 'இலங்கையில் முஸ்லிம் விவாகரத்துச் சட்டங்களை திருத்துவதற்கு அமெரிக்கா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அமெரிக்கத் தூதுவரிடம் நான் தெரிவித்ததாக, சிலர் பிரசாரம் செய்கின்றனர். இது தொடர்பில் அமெரிக்கத் தூதுவரிடம் நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை.

'பெண்கள் சம்பந்தமான விடயங்களை விசாரிப்பதற்கும் வழிகாட்டுவதற்கும்  பெண் ஜூரிமார் நியமிப்பது பொருத்தமானது என்றும் மேலும் அதில் சில பகுதிகள் ஷரீஆவின் வரையறைக்குள் திருத்தப்பட வேண்டும் என்றும் எமது அமைப்பானது,  திருத்தச் சபையிலுள்ள சகோதரர் சலீம் மர்ஸுக் மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைக்கும் கடிதம் அனுப்பியுள்ளது” என்றார்.

'அமெரிக்கத்  தூதுவரால் அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்ட  இப்தார் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அமெரிக்கத் தூதுவரலாயத்திலிருந்து  எனக்கு அழைப்புக் கிடைத்தது. இந்நிலையில், அங்கு நான் சென்றபோது, என்னைத் தவிர ஒரே அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களும்,  கருத்தியல் வாதங்களில் ஒரே கருத்துள்ளவர்களும் காணப்பட்டார்கள். 

அப்போது, முஸ்லிம் விவாகரத்துத் தொடர்பாக அமெரிக்கத் தூதுவரிடம்   கருத்துத் தெரிவித்த சிலர்  எமது இளம் வயதுத் திருமணம், பலதார திருமணம், விவாகரத்து அதிகரித்துச் செல்லுதல்  தொடர்பில் கூறி அவை மாற்றப்பட வேண்டும் என்றார்கள். அவ்வேளையில்; குறுக்கிட்டு  கருத்துத் தெரிவித்த நான், அவ்வாறு எல்லா விடயங்களையும் பொதுப்படையாகப்  பார்க்க முடியாது என்பதுடன், பெண் காதி நீதிபதி நியமனம் தொடர்பாகவும் எனது அதிருப்தியை வெளியிட்டேன்.

முஸ்லிம் பெண்கள், காதி நீதிபதியாக இருந்து சில தீர்மானங்களை எடுக்கும்போது, பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுக்க வேண்டி வரும் என்பதுடன்,   உலமாக்களின் வழிகாட்டலும் ஆலோசனையும்  இங்கு முக்கிய பங்காக இருக்கின்றது. இதனால், பெண் காதி நீதிபதிகள் தேவையில்லை என்றே குறிப்பிட்டேன்.

'நேரடியாக முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டங்களை நீங்கள் திருத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று, இச்சந்தர்ப்பத்தில் நான் தெரிவிக்கவில்லை” என்றார்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X