2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

முஸ்லிம் தலைமைகள் தவறவிடக் கூடாது

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 03 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

.எச்.. ஹுஸைன்

சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்க முன்வந்துள்ளமை, காலத்துக்கேற்ற முடிவு, இது மூத்த தமிழ் தலைவர் சம்பந்தன் ஐயாவின் அரசியல் தீர்க்கதரிசனத்தின் அடையாளமாக உள்ளது என சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

 சம்பந்தன் ஐயாவின் இந்த முடிவு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடைந்து கொள்ளும் வாசலைத் திறக்க வைத்துள்ளது. இதனை நானும்  வரவேறகிறேன்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு சர்வகட்சி அரசாங்கம் அவசியம் அமைக்கப்பட வேண்டும். இந்தத் தேவையிலிருந்து பொறுப்புள்ள அரசியல் கட்சிகள் விலகியிருக்க முடியாது.  

இந்தத் தருணத்தை நன்குணர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு இரட்டைக்காய்களை பறித்துள்ளது. ஒன்று மக்களின் நெருக்கடியை போக்க உதவுவது, இரண்டாவது தமிழர்களின் பிரச்சினையை தீர்க்க தருணம் பார்ப்பது.

எனவே, ஒருவகையில் இதுவும், பேரம்பேசும் சக்தியின் ஒரு வடிவமாகவே பார்க்கப்பட வேண்டும்.

எனவே, இன்றைய நிலையில் அரசாங்கத்துக்கு எழுந்துள்ள தேவையை அறிந்து, முஸ்லிம் தலைமைகளும் இவ்வாறான அரசியல் வியூகங்களை வகுக்க வேண்டும். இழந்து போயுள்ள பேரம்பேசும் பலத்தை இலகுவாக பயன்படுத்த தற்போது கிடைத்துள்ள இந்தச் சந்தர்ப்பத்தை முஸ்லிம் தலைமைகள் தவறவிடக் கூடாது” என்றும் அமைச்சர் நஸீர் அஹமட் கேட்டுக்கொண்டுள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X