Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜூன் 21 , பி.ப. 03:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேரின்பராஜா சபேஷ்
“2015ஆம்ஆண்டு பொதுத் தேர்தலோடு, முஸ்லிம்களின் மூளைகளை முடக்குகின்ற அரசியல் தொடங்கப்பட்டுவிட்டது” எனத் தெரிவித்த ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பஷீர் சேகு தாவூத், “அந்த முடக்க நிலையிலிருந்து முஸ்லிம்களை வெளியில் கொண்டுவந்து, அச்சமற்ற பொருளாதார வணிக சூழலை ஏற்படுத்தக்கூடிய ஒரு வாய்ப்பாக வருகின்றன நாடாளுமன்ற தேர்தலை மக்கள் பயன்படுத்த வேண்டும்” என்றார்.
மட்டக்களப்பு - ஏறாவூரில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு அவர் மேலும் கருத்துரரைக்கையில், “ முஸ்லிம்களுக்குரிய அடையாளத்தை அரசியலுக்கூடாக செய்கின்றபோது, எமது தனித்துவத்துக்குரிய அரசியலாக இருக்கவேண்டுமே தவிர, முஸ்லிம்களை தனிமைப்படுத்துகின்ற அரசியலாக இருக்க கூடாது.
“பெரும்பான்மையானசிங்கள தலைவர்களோடு முஸ்லிம்கள் தங்களுடைய அரசியலை அடையாளப்படுத்த வேண்டிய அவசியமும் உள்ளது. ஏற்கனவே மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களின் அரசியலை தூக்கி நிறுவத்துவதற்கு மிகவும் தீவிரமாகச் செயற்பட வேண்டிய காலம் தற்போது உருவாகியுள்ளது” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
40 minute ago