Editorial / 2019 ஓகஸ்ட் 08 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கொழும்பு மாநகரில் அதிகளவில் குப்பைக் கழிவுகள் சேர்வது குறித்து, முஸ்லிம் மக்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதற்குத் தான் கடுமையான ஆட்சேபனையைத் தெரிவிப்பதாகத் தெரிவித்த கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட், 'மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப்போடும்' நிலைபோல் எடுத்ததற்கெல்லாம் முஸ்லிம் மக்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நிலைமை உருவாகி வருகின்றதெனவும் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக கருத்து வெளியிட்ட முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்,
கொழும்பில் அதிகளவில் குப்பை சேர்வதற்கும் முஸ்லிம்கள்தான் காரணம் என்று சொல்லும் நிலையும், அவற்றை முஸ்லிம்கள் வாழும் பிரதேசங்களில்தான் கொட்டவேண்டுமென கருத்துரைக்கும் நிலையும் உருவாகிவருகிறது கவலைக்குரியவிடயமெனத்தெரிவித்த அவர்,
இத்தகைய நிலை தொடர்ந்து நீடித்தால் எதிர்காலத்தில் இனங்களுக்கிடையில் விரிசலைத் தோற்றுவிக்கும் என்பதைக் கவனத்தில் கொண்டு அரசியல்வாதிகள் செயற்படவேண்டுமெனவும் சட்டங்களை அவரவர் தத்தமது விருப்பு வெறுப்புக்கு ஏற்ற வகையில் எடுத்துக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.மதவாதம் இதற்கான வழிகளை திறந்து விட்டுள்ளது.
பர்தா அணிந்து மாணவிகள் பரீட்சையில் தோற்றக்கூடாதெனச் சட்டத்தைக் கையில் எடுத்துகொள்ளும் நிலையும் தோன்றியுள்ளது.நாட்டில் சமகாலத்தில் நடைபெற்ற தனிப்பட்ட சம்பவங்கள்கூட முஸ்லிம்களைச் சம்பந்தப்படுத்தும் இலக்குகளைக் கொண்டவையாக இருக்கும் நிலைமைகளே காணப்படுகின்றன.இந்தக் காய்நகர்த்தல்கள் கூட சிலவேளை சிறுபான்மை சமூகங்களை பிரித்தாளும் நிலைக்கு செல்லக்கூடிய அபாயம் உள்ளது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டுஎன்றுகூறிய அவர்,தமிழ் - முஸ்லிம் மக்கள் சமகால கள நிலவரங்களை அறிந்து தாமும் வியூகங்களை வகுத்து செயற்பட வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன் என்று கூறினார்.
9 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
1 hours ago