2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

மூன்று பிரதேசங்கள் டெங்கு அபாயத்தில்; ஒருவர் பலி

Freelancer   / 2023 ஏப்ரல் 26 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை வடக்கு, காத்தான்குடி மற்றும் வாழைச்சேனை மத்தி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் டெங்கு நோய் தீவரமாகப் பரவி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

இம்மாவட்டத்தில் கடந்த  ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று 25ஆம் திகதி வரையான காலப் பகுதியில் 700 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் 22 வயது இளைஞன் ஒருவர் மரணத்தைத் தழுவியுள்ளார் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதனையடுத்து, டெங்கு நோயை ஒழிக்கும் விசேட வேலைத்திட்டங்கள் மாவட்ட ரீதியாக இடம்பெற்று வருகின்றன என்றும் அதற்கு ஒத்துழைக்காதவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன என்றும் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். (N)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .