2025 மே 15, வியாழக்கிழமை

மூன்று வாகனங்களில் 34 தேக்கு மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டன

பேரின்பராஜா சபேஷ்   / 2018 ஒக்டோபர் 25 , பி.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மட்டக்களப்பு, தொப்பிகல, நரக்கமுல்ல பிரதேசக் காட்டில், சட்டவிரோதமாக வெட்டி, விற்பனைக்காக மூன்று வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட ஒரு தொகைத் தேக்கு மரக்குற்றிகள் இன்று (25) கைப்பற்றப்பட்டன.

மட்டக்களப்பு- புல்லுமலை வட்டார வனக் காரியாலய அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, வவுணதீவு தாண்டியடி விசேட அதிரடிப் படையினரின் ஒத்துழைப்புடன், இந்த மரக்கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளது.

மரக்கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லொறி ஒன்று, உழவு இயந்திரங்கள் இரண்டு ஆகியவற்றுடன், 34 தேக்கு மரக்குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சாரதிகள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் தப்பியோடிவிட்டனரென, வட்டார வன காரியாலய அதிகாரி என். நடேசன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .