Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Princiya Dixci / 2021 பெப்ரவரி 24 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை அபகரிப்பு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் அத்துமீறிய அபகரிப்புத் தொடர்பான வழக்கு, கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று (23) எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, எதிர்வரும் மே மாதத்துக்கு வழக்கு விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அத்துடன், மயிலத்தமடு, மாதவனை பகுதியில் மேய்ச்சல் தரை பகுதியில் உள்ளவர்கள், இம்மாதம் 28ஆம் திகதி அங்கிருந்து வெளியேறிவிடுவார்கள் என அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறக்கூடாது எனத் தாம் வலியுறுத்தியதாகவும் சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.
நேற்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோ.கருனாகரம் (ஜனா) ஆகியோரும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் பிரசன்னமாகியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
6 hours ago