2025 ஜூலை 17, வியாழக்கிழமை

மேய்ச்சல் தரைகள் அபகரிப்பு

Editorial   / 2020 ஜூன் 02 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மயிலத்தமடு, மாதவனை பகுதியிலுள்ள மேய்ச்சல் தரைக் காணிகளை பெரும்பான்மை இனத்தை சேர்ந்தவர்கள் அபகரித்துவருவதாகவும் அவற்றைத் தடுத்து நிறுத்த நடவடிக்கையெடுக்குமாறும், பிரதேச கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2013ஆம் ஆண்டு தொடக்கம் பொலன்னவையில் இருந்து மயிலத்தமடு, மாதவனை பகுதிக்கு வந்த பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்கள், காணிகளை அபகரித்து பயிர்ச்செய்கை முன்னெடுத்து வருவதாக, கால்நடை வளர்ப்போர் தெரிவிக்கின்றனர்.

2015ஆம் ஆண்டு, முன்னாள் அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பை சேர்ந்தவர்களால், குறித்த அத்துமீறல்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் பொலன்னறுவையில் இருந்துவரும் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களால் காணிகள் அபகரிக்கப்படுவதாக, கால்நடை வளர்ப்போர் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதி தங்களின் நிலம் என்றும் மாடுகளை அப்பகுதியில் மேயவிடவேண்டாம் எனவும் மாடுகளை அங்கிருந்து கொண்டுசெல்லுமாறும் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் தமக்கு அச்சுறுத்தல் விடுப்பதாகவும் அப்பகுதியை சேர்ந்த கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவோர் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் 400க்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்போர் உள்ள நிலையில், தமது பிரச்சினைத் தீர்க்க உரிய தரப்பினர் விரைவான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும், அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X