2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

யானைத் தாக்கி பெண் படுகாயம்

Gavitha   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்சேனைப்பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை (29) யானையின் தாக்குதலுக்குள்ளாகி பெண்ணொருவர் படுகாயங்களுக்கு உள்ளானார்.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி ஆகிய பகுதிகளில் யானைகளின் தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில், இன்றும் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த ந.தில்லைநாயகி (58) என்ற பெண், மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி ஆகிய பகுதிகளில் யானையின் தாக்குதல்கள் காரணமாக ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளதுடன் 30க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X