2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

யானை தாக்கியதில் ஒருவர் பலி

Freelancer   / 2022 ஜூலை 14 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

- வ.சக்தி

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள நெடியமடு கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு (12) காட்டு யானை தாக்கியதில் நபர் ஒருவர் பலியாகியதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆயித்தியமலையில் வசித்து வரும் கோயில்போரதீவைச் சேர்ந்த மு. விசயராசா (54 வயது) என்பவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உன்னிச்சை மாரியம்மன் ஆலயத்திலிருந்து ஆயித்தியமலையில் உள்ள தனது வீட்டுக்கு செல்லும்போது நெடியமடு வைத்தியசாலைக்கு முன்னால் பிரதான வீதியில் நின்ற காட்டுயானை தாக்கியதில் சம்பவ இடத்திலே குறித்த நபர் பலியானதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வருகின்றது.

இந்த சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை ஆயித்தியமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X