Mayu / 2025 ஜனவரி 08 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
யானையிடமிருந்து தப்பிப்பதற்காக ஆற்றில் குதித்த நபர் உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு மாவட்ட கரடியனாறு பொலிஸ் பிரிவிட்குட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (05) காலை 08.00 மணியளவில் தனது 14 வயதுடைய மகனை அழைத்துக் கொண்டு காட்டுக்கு விறகு சேகரிக்க சென்ற போது, திடீரென வந்த யானையொன்று இவர்களை துரத்த, அதிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள ஆற்றினுல் குதித்துள்ளனர்.
இந்நிலையில், மகன் நீந்தி கரைசேர குறித்த நபர் தொடர்ந்து நீந்த முடியாமல் நீரில் மூழ்கி மரணித்துள்ளார்.
உயிரிழந்தவர் ஆறு பிள்ளைகளின் தந்தையான கணபதிப்பிள்ளை கருனாகரன் (49) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்ற பிரதேச மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நஸீர் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர்.,உடற்கூற்று பரிசோதணைக்காக சடலத்தை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட பின்னர் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்பட்டது
எம் எஸ் எம் நூர்தீன்
20 minute ago
32 minute ago
37 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
32 minute ago
37 minute ago
45 minute ago