2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

யானைகளிடமிருந்து காப்பாற்றுமாறு கவனயீர்ப்புப் பேரணி

Editorial   / 2019 பெப்ரவரி 20 , பி.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம், பேரின்பராஜா சபேஷ்

யானை வேலி அமைத்து, தமக்குப் பாதுகாப்பளிக்குமாறு கோரி, மட்டக்களப்பு - தொப்பிகல பகுதிப் பொதுமக்கள், இன்று (20)  கவனயீர்ப்புப் பேரணியில் ஈடுபட்டனர்.

திகிலிவட்டைப் பிரதேசத்திலிருந்து ஆரம்பமான இப்பேரணி, கிரான் பிரதேச செயலக முன்றலில் நிறைவடைந்தது.

திகிலிவட்டை கிராமத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காட்டு யானை தாக்கியதில் இரு பிள்ளைகளின் தாயான முத்துலிங்கம் நிரஞ்சலா (வயது 31) என்பவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு, கிரான் பிரதேச செயலாளர் பிரிவில், யானைகளால் பல உயிரிழப்புகளும் தாக்குதல் சம்பவங்களும் இடம்பெறுவதாக, பேரணியின் கலந்கொண்ட மக்கள் தெரிவித்தனர்.

எனவே, காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில், யானை வேலி அமைத்துத்தருமாறு, அவர்கள் கோரினர்.

பேரணியை அடுத்து, மட்டக்களப்பு மாவட்டச் செயலாளருக்கான மகஜரொன்றை, பிரதேச செயலாளர் எஸ். ராஜ்பாபுவிடம் கோராவெளி வட்டார மக்கள் பிரதிநிதி காளிக்குட்டி நடராஜா கையளித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .