Princiya Dixci / 2021 ஜனவரி 27 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டத்தின் இருவேறு இடங்களில் காட்டு யானை தாக்கியதில் இருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முன்னதாக, வாழைச்சேனை பொலிஸ் பிரிவின் மியான்கல் வயலில் அமைக்கப்பட்டிருந்த பரணில் காவலில் ஈடுபட்டிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான திருவெம்பலம் சோமலிங்கம் (வயது 64) என்பவர், நேற்று (26) அதிகாலை காட்டு யானை தாக்கியதில் ஸ்தலத்திலேயே மரணித்துள்ளார்.
உடற்கூராய்வுப் பரிசோனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, இன்று (27) காலை காட்டு யானை தாக்கியதில் பழைய சந்தை வீதி, சித்தாண்டி 4 எனும் கிராமத்தைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை தயாபரன் (வயது 34) என்பவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள லாவாணை எனுமிடத்தில் இடம்பெற்றுள்ளது.
இவர் தனது வயல் வாடியிலிருந்து இன்னொரு வயல் வாடிக்கு காலை உணவுக்காகச் சென்றுகொண்டிருக்கும்போது காலை 6.45 மணியளவில் குறுக்கிட்ட காட்டு யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026