Janu / 2025 பெப்ரவரி 03 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனை கிராமத்தில் யானை பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார கம்பியில் சிக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் திங்கட்கிழமை (03) இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் முதலைகுடாவைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான சோமசுந்தரம் சீராளசிங்கம் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வயலுக்கு காவலுக்கு சென்றவேளை திங்கட்கிழமை(03) அதிகாலை 02.00 மணியளவில் யானை துரத்தி சென்றுள்ளது. யானைக்கு பயந்து ஓடியதில் சட்டவிரோதமாக இணைக்கப்பட்டிருந்த மின்கம்பியில் சிக்குண்டு விவசாயி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த பிரதேசத்தில் கிராம உத்தியோகத்தரால் கடந்த மார்கழி மாத்தில் ஒலிபெருக்கி மூலமும் கிராம கூட்டங்கள் ஊடாகவும் காட்டு யானை பாதுகாப்புக்காக சட்டவிரோத மின்சார வேலியினை அமைக்க வேண்டாம் என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வ.சக்திவேல்
17 minute ago
29 minute ago
34 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
29 minute ago
34 minute ago
42 minute ago