ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2019 செப்டெம்பர் 30 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

சமூகத்துக்கிடையில் வெறுமனே சேவைகளைப் பரவலாக்குவதன் மூலமும் ஆளணியினரை அதிகரிப்பதன் மூலமும் மீளக் கட்டியெழுப்ப முடியுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளதாகவும் இதுவொரு பெரும் சவாலான விடயமெனவும், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிரேஷ்ட உள நல வைத்திய நிபுணர் ரீ. கடம்பநாதன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான மயூரி ஜனன் தலைமையில் நடைபெற்றும் ஒரு வார கால வதிவிடப் பயிற்சி நெறியில், இன்று (30) கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அரச அலுவலகங்களில் கடமை புரிகின்ற உள நல ஆற்றுகையாளர்களுக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள சிவில் சமூக மட்ட அமைப்புகளில் பணிபுரிகின்ற செயற்பாட்டாளர்களுக்குமாக இந்தப் பயிற்சிநெறி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
அங்கு தொடர்ந்து கருத்துப் பகிர்ந்து கொண்ட சிரேஷ்ட உள நல வைத்திய நிபுணர், எமக்குள்ளே உள்ள பலவீனங்களையும் குறைபாடுகளையும் ஆராய்ந்து, அவற்றை நிவர்த்தி செய்வதற்கான வழிவகைகளையும் கண்டுபிடிக்க வேண்டுமென்றார்.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழில்வாண்மையுடைய உளநல ஆற்றுப்படுத்துநர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், 30 வருட கால யுத்தத்துக்குள் சிக்கிக் கொண்டு நாம் தொலைத்த வாழ்வியலின் அத்தனை சிறப்பம்சங்களையும் இனிப் புதிதாகத் தேட வேண்டியிருப்பதால் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள ஏனைய மாவட்டங்களைப்போல் மட்டக்களப்பு மாவட்டமும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளதாகக் கூறினார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago