2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

யோகேஸ்வரனிடம் பொலிஸ் விசாரணை

Princiya Dixci   / 2021 பெப்ரவரி 18 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கே.எல்.ரி.யுதாஜித் 

நீதிமன்ற உத்தரவை மீறி, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்துகொண்டதாகத் தெரிவித்து, மட்டக்களப்பு பொலிஸ் நிலைய அதிகாரிகள், நேற்று (17) தம்மிடம் விசாரணைகளை மேற்கொண்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எமது அலுவலகத்துக்கு வருகை தந்த மட்டக்களப்பு பொலிஸ் உத்தியோகத்தரால், முல்லைத்தீவு மாவட்டத்தின், மாங்குளம் பொலிஸ் பிரிவினரால், பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணிக்கு இம்மாதம் 06ஆம் திகதியன்று தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நீதிமன்றக்கட்டளை எனக்கு வழங்கப்பட்டதாகவும் ஆனால், நான் அதனை மீறி அந்தப் பேரணியில் கலந்துகொண்ட ஒளிப்பதிவுகள் தங்களிடம் உள்ளதாகக்கூறி என்னிடம் வாக்குமூலம் கோரப்பட்டது. 

அதற்கு பதிலளித்த நான் "இந்த நாடு சனநாயக நாடு. எனக்கிருக்கும் சனநாயக உரிமையின் அடிப்படையில் இவ்வாறான சாத்வீகப் போராட்டங்களில் நான் கலந்துகொள்ளச் சென்றது உண்மைதான். ஆனால், மாங்குளம் பொலிஸார், மாங்குளம் ரயில் கடவையை அண்மித்ததாக வைத்து நான் மட்டுமே வந்த எனது வாகனத்தை மறித்து, அந்த நீதிமன்றக் கட்டளையை வழங்கினார்கள். 

அதனை வழங்கியதன் பின், எனது பெயர் அக்கட்டளைப் பத்திரத்தில் சுட்டிக்காட்டப்படா விடினும்கூட, நீதிமன்றத்தின் கௌரவத் தன்மையை மதித்து, தொடர்ந்து அப்பேரணியில் செல்வதை நிறுத்திக்கொண்டு, நான் மட்டக்களப்புக்கு திரும்பிவிட்டேன்" என்பதை அவர்களுக்கு தெளிவாக எடுத்துரைத்தேன் என்று தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X