Princiya Dixci / 2016 ஜூலை 05 , மு.ப. 10:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

"புனித ரமழான் மாதத்தில் பெற்றுக்கொண்ட ஆன்மீக, லௌகீக பயிற்சிகளையும் உணர்வுகளையும் வாழ்நாளில் தொடர்ந்தும் கடைபிடிப்பதன் மூலம் வாழ்வின் வெற்றி தங்கியுள்ளது என, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்". அவரிதனை ஊடகங்களுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் புனித நோன்புப் பெருநாள் தெரிவிருந்தார்.
மேற்கொண்டு அவர் தெரிவித்தாவது, "நோன்புப் பெருநாளில் நாம் பெற்றிருக்கும் மகிழ்ச்சியானது அனைத்துச் சமுதயாத்தினருக்கும் கிடைக்க இறைவனைப் பிராத்திக்க வேண்டும். பிரதேச மற்றும் அரசியல் ரீதியாக பிரிவினை கொள்ளாது ஒன்று படுவோமேயானால், முஸ்லிம் சமூகத்தினர் எதிர்நோக்குகின்ற சவால்களை முறையடிக்க முடியும்".எனத் தெரிவித்தார்.
"எதிர்வரும் சில மாதங்களில் அரசியலில் பல்வேறு பட்ட மாற்றங்கள் இடம்பெறக் கூடிய சாத்தியங்கள் தென்படுகின்றன. சர்வதேசம் எங்களை ஒரு பொருட்டாகக் கருதாத போதும், உள்ளூர் மட்டத்திலான ஆட்சியாளர்களாவது எமக்குப் பொருத்தமான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்,
"மீள்குடியேற்றம், தொழில்வாய்ப்பு போன்ற வாழ்வாதாரப் பிரச்சினைகளினால் பாதிக்கப்படும் மக்களுக்கு மீட்டு மக்களை நிம்மதியாக வாழச் செய்வதே தார்மீகக் கடமையாகும்". என முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்திருந்தார்.
22 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
9 hours ago