2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

ரயிலில் மோதுண்டு இளைஞன் உயிரிழப்பு

Editorial   / 2020 ஜனவரி 27 , பி.ப. 03:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம், ஏ.எச்.ஏ. ஹுஸைன்

தண்டவாளத்தில் அமர்ந்து ஹெட்செற் அணிந்து பாடல்களை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்த இளைஞன், ரயிலில் மோதுண்டு ஸ்தலத்திலேயே பலியாகியுள்ள சம்பவம், மட்டக்களப்பு, புணானையில் இடம்பெற்றுள்ளது.

நேற்று (26) இரவு 9.30 க்கு இடம்பெற்றுள்ள இந்த விபத்தில், புணானை, மயிலந்தன்னை கிராமத்தைச் சேர்ந்த ஜேக்கப் ஜோன்சன் (வயது 19) என்பவரே பலியாகியுள்ளார் என, வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

மட்டக்களப்பிலிருந்து இரவு 8.15 மணிக்கு கொழும்பு நோக்கிப் புறப்பட்ட இரவு நேர கடுகதி ரயில், புணானையை கடக்கும்போது இந்த விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தை அறிந்து உதவிக்கு விரைந்தவர்களால் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டு, வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் இன்று (27) அதிகாலை 2 மணியளவில் ஒப்படைக்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்தலத்துக்கு விரைந்துள்ள பொலிஸார், சம்பவம்பற்றிய விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

விபத்தில் சிக்கி பலியான அந்த இளைஞர், ஹெட்செற் அணிந்தவாறு குளிரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள  சாரத்தால் தன்னைப் போர்த்துக் கொண்டு ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து இருந்தவாறு வானொலி சினிமாப் பாடல்களை ரசித்துக் கொண்டிருந்ததாக, ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .