2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ரயிலில் மோதுண்டு குடும்பஸ்தர் மரணம்

Princiya Dixci   / 2021 மார்ச் 07 , மு.ப. 10:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச்.ஏ. ஹுஸைன் , ரீ.எல்.ஜவ்பர்கான், எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, ஏறாவூரில் இடம்பெற்ற ரயில் விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பலியானதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (06) கொழும்பிலிருந்து புறப்பட்டு மட்டக்களப்பை நோக்கிப் பயணித்த ரயில், மட்டக்களப்பை நெருங்கும்போது மைலம்பாவெளி எனுமிடத்தில் வைத்து இந்தக் குடும்பஸ்தர் ரயிலில் மோதுண்டுள்ளார்.

சம்பவத்தில் பலியாகிய கொக்குவில் கிராமம் 2ஆம் குறுக்கைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் செல்வம் (வயது 41) எனும் குடும்பஸ்தரின் சடலம்,  உடற் கூராய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X