Editorial / 2018 மே 26 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஆர்.ஜெயஸ்ரீராம், கனகராசா சரவணன்
மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில், நேற்று (25) மாலை, ரி-56 ரக துப்பாக்கியொ்னறை, வாகரை பொலிஸார் மீட்டுள்ளனர்.
கதிரவெளி புதூர் கிராமத்தில், குடும்பஸ்த்தர் ஒருவர் தமது வளவிலுள்ள மாடு வளர்க்கும் காணியில் துப்பரவு பணியில் ஈடுபட்டுள்ளார். பின்னர் மாட்டின் கழிவுகளை மண்ணில் புதைக்கும் நோக்குடன், மடுவொன்றை வெட்டியபோது, அங்கு காணப்பட்ட துப்பாக்கி தொடர்பாக, பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
இதையடுத்தே, குறித்த துப்பாக்கி, வாகரை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசம், விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசம் என்பது குறிப்பிடத்தக்கது.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago