Gavitha / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
கொழும்பு - மட்டக்களப்பு நெடுஞ்சாலையிலுள்ள வெலிகந்த, கடவத்தமடு பகுதியில் காத்தான்குடியை நோக்கி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்துக்கொண்டிருந்த லொறியொன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து காரணமாக, லொறி பகுதியளவில் சேதமiடைந்துள்ளதோடு, லொறியைச் செலுத்தி வந்த சாரதியான காத்தான்குடியைச் சேர்ந்த முஹம்மது கபூர் முஹம்மது அஜ்மல் (வயது 33) என்ற நபர், வெலிகந்த பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சீன ஏற்றிக்கொண்டு வந்த லொறியின் முன்பக்க சில்லு ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே, வீதியில் பயணித்துக்கொண்டிரு லொறி பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது.
விபத்தைக் கண்ட கிராமவாசிகளும் பாதையில் சென்றுக்கொண்டிருந்தவர்களும் இணைந்து லொறியில் இருந்த சாரதியையும் உதவியாளரையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago