2025 மே 12, திங்கட்கிழமை

வாகனங்கள் தீக்கிரை

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 31 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில் சனிக்கிழமை (30) நள்ளிரவு, இரு மோட்டார் சைக்கிள்கள், சைக்கிளொன்று மற்றும் முச்சக்கரவண்டியொன்று என்பன இனந்தெரியாதோரினால் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.   

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடா பிரதேசத்திலுள்ள வீடொன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சைக்கிளொன்றும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

இது இவ்வாறிருக்க, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்சேனைக் கிராமத்திலுள்ள காளி கோவிலுக்கு முன்பாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியொன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. காளி கோவில் பூசகரின் முச்சக்கரவண்டியே இவ்வாறு தீக்கிரையாக்கப்பட்டு உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X