Suganthini Ratnam / 2016 ஜூன் 27 , மு.ப. 09:23 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பு, பிள்ளையாரடிப் பகுதியில் வாகனங்கள் திருத்தும் இடம் ஒன்றில்; (கராஜ்) இன்று திங்கட்கிழமை பிற்பகல் தீ பரவியதில் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் சில எரிந்து நாசமாகியுள்ளன.
இதன்போது ஒரு வான், ஒரு மோட்டார் சைக்கிள், இரண்டு வாகன இயந்திரங்கள் எரிந்துள்ளன.
வான் ஒன்றை திருத்திக்கொண்டிருந்தபோது அந்த வானிலிருந்து தீ வெளியாகியதாகவும் இதனைத் தொடர்ந்து அங்கு தீ பரவியதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
மேற்படி வாகனத் திருத்துமிட ஊழியர்களும் பொதுமக்களும் தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தால்; சுமார் 35 இலட்சம் ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டில் கராஜ் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

24 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
9 hours ago