2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

வாகரை கல்வி கோட்டத்தில் 97 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை

Suganthini Ratnam   / 2016 ஜனவரி 26 , பி.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு, கல்குடா கல்வி வலயத்துக்குட்பட்ட வாகரைக் கல்விக் கோட்டத்தில் 97 ஆசிரியர்களுக்கு இதுவரையில் பற்றாக்குறை காணப்படுவதாக அவ்வலயக் கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா, இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

இந்த ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பில்  
கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிஷாமுக்கு தெரியப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரின் பணிப்பின் பேரில் ஏறாவூர்ப்பற்று மற்றும் கோறளைப்பற்று கல்விக் கோட்டங்களில் கடமையாற்றும் ஆசிரியர்களில் 50 வயதுக்கு குறைந்த, கஷ்டப் பிரதேசங்களில் கடமையாற்றாத 40 ஆசிரியர்கள் வாகரைக்; கல்விக் கோட்டத்திலுள்ள பாடசாலைகளுக்கு இந்த வருடம் இடமாற்றம் செய்யப்பட்டனர். இருந்தபோதிலும், இக்கோட்டத்தில் ஆசிரியர்கள் பற்றாக்குறை காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

ஆரம்பக் கல்விக்கு 28 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். இதேவேளை, ஆங்கிலப் பாடத்துக்கு 10 ஆசிரியர்களும் கணிதப் பாடத்துக்கு 08 ஆசிரியர்களும் விஞ்ஞானப் பாடத்துக்கு 08 ஆசிரியர்களும் தமிழ்ப் பாடத்துக்கு 06 ஆசிரியர்களும் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பப் பாடத்துக்கு 02 ஆசிரியர்களும்  வரலாறும் புவியியலும் பாடத்துக்கு 07 ஆசிரியர்களும் அழகியல் கல்விப் பாடத்துக்கு 06 ஆசிரியர்களும் விவசாய விஞ்ஞானப் பாடத்துக்கு 02 ஆசிரியர்களும் சமயப்; பாடத்துக்கு 20 ஆசிரியர்களும் பற்றாக்குறையாக உள்ளனர்.

வாகரைக் கல்விக் கோட்டத்திலுள்ள 20 பாடசாலைகளில் சுமார் 6,788 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இந்த ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக ஒவ்வொரு பாடசாலையிலும் தினமும் சுமார் 40 பாடங்கள் நடைபெறாமல் உள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X