Niroshini / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு பிரதேச செயலகத்தில் விளைவுசார் மற்றும் இலக்கு நோக்கிய திட்டமிடல் 2ஆம் கட்ட செயலமர்வு நேற்று புதன்கிழமை பிரதேச செயலாளர் எஸ். ஆர். ராகுலநாயகி தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது,வாகரை பிரதேச செயலகத்துக்குட்பட்ட 16 கிராம சேவகர் பிரிவிலும் அமைக்கப்பட்ட 8 பேரைக் கொண்ட 16 சமூக மட்ட குழுக்களினூடாக கிராம மட்டத்தில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டு முன்வைக்கபட்டன.
இவ்வாறு 16 கிராம சேவகர் பிரிவின் சமூக மட்ட குழுக்களினால் முன்வைக்கப்பட்ட திட்டங்களை ஒன்றிணைத்து பிரதேச செயலகத்துக்கான ஒரு திட்டத்தினை தயாரித்து சமூக மட்ட பிரதிநிதிகளிடம் அனுமதி பெற்றுக் கொள்வதே இச் செயலமர்வின் நோக்கமாகும்.
இச் செயலமர்வில், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கங்காதரன், கிராம சேவை உத்தியோகத்தர்கள், கிராம சேவகர் பிரிவுக்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், திவிநெகும அபிவிருத்;தி உத்தியோகத்தர்கள், குடும்ப நல உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள். பிரதேச சபை உத்தியோகத்தர்கள், கால்நடை வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் ,சமூக மட்டக் குழுக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.



5 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago