2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

வாகரையில் சிறுவர், பெண்களுக்காக பணியகம்

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 09 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, வாகரைப் பொலிஸ் நிலையத்தில் சிறுவர், பெண்கள் பணியகம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில், புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தினேஷ் கருணாநாயக்க தெரிவிக்கையில், 'பெண்களும் சிறுவர்களும் தங்களின் முறைப்பாடுகளைப் பதிவு செய்து தீர்வு காண்பதற்கே பொலிஸ் நிலையங்களில் சிறுவர், பெண்கள் பணியகம் பொலிஸ் நிலையத்துக்குப் புறம்பாக அமைக்கப்படுகின்றன.

மேலும், பின்தங்கியுள்ள வாகரைப் பிரதேச மகளிருக்கும் சிறுவர்களுக்கும் சேவை வழங்கும் வகையில் புதிதாக சிறுவர் மகளிர் பணியகத்தை நாம் ஆரம்பிக்கின்றோம். எதிர்வரும் டிசெம்பர் மாதத்துக்குள் இப்பணியகம் இயங்கத் தொடங்கி விடும்.

இது பொலிஸ் நிலையத்துக்குப் புறம்பாக அமைக்கப்பட்டுள்ளதால், எதுவித பயமுமின்றி பெண்களும் சிறுவர்களும் முறைப்பாடு செய்ய முடியும்.

இப்பணியகத்தில் பெண் பொலிஸாரே பணி புரிவார்கள். இவர்கள் முறைப்பாட்டாளர்களின் உணர்வைப் புரிந்துகொண்டு சிறந்த சேவையை உங்களுக்கு வழங்குவார்கள்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X