2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வாகரையில் மந்த போஷாக்குடைய 778 குடும்பங்கள்

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மட்டக்களப்பு, வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் மந்த போஷாக்கு உடைய 778 குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அப்பிரதேச செயலாளர் எஸ்.ஆர்.ராகுலநாயகி தெரிவித்தார்.

யுனிசெப் நிறுவனத்தின் தாய், சேய் சுகாதார போஷாக்குத் திட்டத்தின் கீழ் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் வாழ்வாதாரத் திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மந்த போஷாக்கு உடைய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக 03 குடும்பங்களுக்கு இன்று திங்கட்கிழமை தலா 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆடுகள் வழங்கப்பட்டன.

மேலும், 02 குடும்பங்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நல்லினக்  கோழிகள் அடுத்த ஒரு சில தினங்களில் வழங்கப்படவுள்ளதாக சர்வோதய நிறுவனத்தின் மாகாண இணைப்பாளர் ஈ.எல்.அப்துல் கரீம் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X