2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

வாசிகசாலைக்கான அடிக்கல் நாட்டி வைப்பு

Suganthini Ratnam   / 2016 மே 01 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்,எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள இலங்கையின் மிகப் பிரமாண்டமான அதிநவீன வசதிகளுடன் கூடிய வாசிகசாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, சனிக்கிழமை (30) நடைபெற்றது.

365 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த வாசிகசாலைக்கான அடிக்கல்லை மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு, புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் நாட்டிவைத்தார்.

புதிய தொழில்நுட்பத்துக்கு அமைய சுமார் 3,000 மாணவர்கள் இருந்து தங்களுடைய நூலக வசதிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த வாசிகசாலை நிர்மாணிக்கப்படவுள்ளது.

சுமார் 18 மாதங்களுக்குள் இந்த வாசிகசாலை கட்டி முடிக்கப்பட்டு மாணவர்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.  இது இலங்கையிலேயே அதிகூடிய மாணவர்கள் ஒரேநேரத்தில் கல்வி கற்கக்கூடிய நவீன தொழில்நுட்பத்துடன் அமைந்த வாசிகசாலையாக திகழும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X